एवमेतद्यथात्थ त्वमात्मानं परमेश्वर ।द्रष्टुमिच्छामि ते रूपमैश्वरं पुरुषोत्तम ॥
evametadyathāttha tvamātmānaṃ parameśvara |draṣṭumicchāmi te rūpamaiśvaraṃ puruṣottama ||
பரமேஸ்வரா, நீ உன்னைப் பற்றி எவ்வாறு கூறினாயோ அது அப்படியே உள்ளது. இருந்தாலும், புருஷோத்தமா, உனது ஈஸ்வர ரூபத்தைக் காண நான் விரும்புகிறேன்.
விளக்கம்
கிருஷ்ணர் தம் மகிமையையும், உயிர்கள் தம்மிடமிருந்து தோன்றி தம்மிடமே மீள்வதையும் கூறியதை அர்ஜுனன் இப்போதுதான் கேட்டான். அவற்றையெல்லாம் ஏற்றுக்கொள்வதாகக் கூறுகிறான்; ஆனால் கேட்பதோடு நிற்காமல் இப்போது காண விரும்புகிறான். எனவே கிருஷ்ணரின் தெய்வீகமான ஈஸ்வர ரூபத்தை (ஐஸ்வர ரூபம்) காணக் கேட்டு, அவரைப் பரமேஸ்வரன் என்றும் புருஷோத்தமன் என்றும் அழைக்கிறான்.