त्याज्यं दोषवदित्येके कर्म प्राहुर्मनीषिणः ।यज्ञदानतपःकर्म न त्याज्यमिति चापरे ॥
tyājyaṃ doṣavadityeke karma prāhurmanīṣiṇaḥ |yajñadānatapaḥkarma na tyājyamiti cāpare ||
செயல் குறையுள்ளது என்பதால் அதைக் கைவிட வேண்டும் என்று சில அறிஞர்கள் கூறுகிறார்கள்; வேள்வி, தானம், தவம் ஆகிய செயல்களைக் கைவிடக் கூடாது என்று மற்றவர்கள் கூறுகிறார்கள்.
விளக்கம்
சன்னியாசத்துக்கும் தியாகத்துக்கும் உள்ள வேறுபாடு பற்றிய அர்ஜுனனின் கேள்விக்குக் கிருஷ்ணர் தொடர்ந்து பதிலளிக்கிறார். எல்லாச் செயலிலும் தோஷம் என்னும் குறை கலந்திருப்பதால் அதைக் கைவிட வேண்டும் என்று ஒரு சாரார் கூறுகின்றனர்; யாகம், தானம், தவம் ஆகியவற்றைக் கைவிடக் கூடாது என்று மற்றொரு சாரார் கூறுகின்றனர். தமது சொந்த முடிவை அடுத்த ஸ்லோகத்தில் கூறுவதற்கு முன், இங்கே இந்த விவாதத்தை அவர் எடுத்து வைக்கிறார்.